×

பிரதமர் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்!

ராமநாதபுரம்: பிரதமர் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் அவர்கள் வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நலன்கருதி 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்கள் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் குறித்த விபரம்: 20.01.2024 அன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 21.01.2024 அன்று இராமேஸ்வரம் நகரில் காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் இராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் சென்று வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் குறித்த விபரம் : 20.01.2024 நண்பகல் 12:00 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12:00 மணி வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் மாற்றம் குறித்த விபரம்: 20.01.2024 அன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வருகையையொட்டி காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு நலன் கருதி இராமேஸ்வரம் நகர்ப்பகுதி முழுவதும் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இருதினங்களுக்கு டிரோன் கேமரா பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

The post பிரதமர் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,District Governor Pa. Vishnu Chandan, E. ,Prime Minister of India ,Rameshwaram ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்